Wednesday, November 30, 2011

எதிர் நோக்கி..

பார்க்கும் இடமெல்லாம்
அவள் தொடாத
பொம்மைகளும் புத்தகங்களும்
வரிசை மாறாமல்

இரண்டு நாள் பிரிவு தான்
இருந்தும் அடிக்கடி
சிந்தனை செயலிழக்கிறது

நினைவில் காடு கொண்ட மிருகமாய்
அவளைக் கொண்டு
அலைகிறேன்.

நாளை வீடு திரும்பும்
என் மகளை
எதிர் நோக்கி.....

நன்றி : அதீதம் (சுட்டி )

No comments:

படிக்க ரசிக்க ஒரு திருக்குறள்