மணல் கடிகாரம்*****************
அவன் எப்போதும்
என்னைப் பின் தொடர்கிறான்.
தவறி கிணற்றில் விழுந்தபோது
எட்டிப் பார்த்தான்.
விஷச்சுரத்தின் போது சற்றே
அருகமர்ந்தான்.
இப்படியாய் எனக்கு
நண்பனாகி
நகர மறுக்கிறான்
என்னை விட்டு எப்போதும்
அவன் மணல் கடிகாரத்தின்
கடைசித் துகளுக்காய்
காத்திருக்கிறான்
என்னுடன்
Image courtesy : http://www.cartoonstock.com/vintage/directory/s/sand_timer.asp
All copyrights to the image to http://www.cartoonstock.com/vintage/directory/s/sand_timer.asp
7 comments:
Post a Comment