Sunday, May 02, 2010

மதத்தின் சார்பில் மெயில் அனுப்பும் உத்தமர்களுக்கு!!

மதம் கொண்ட மஹானுபாவர்களே உங்கள் அனைவருக்கும் என் வந்தனங்கள்.




எத்தனையோ முறை நான் பதமாகவும் இதமாகவும் மடலனுப்பி சொல்லிவிட்டேன், உங்களின் மடலுக்கானத் தேவை எனக்கில்லை என்று. உங்களின் குருட்டுக் காதில் இவை விழுந்திருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால் செவிடான கண் கொண்டு நீங்கள் அதைப் படித்தீர்களா என்றே தெரியவில்லை. யான் சொல்லிக் களைத்து தாங்கள் அனுப்பும் மடலின் முகவரியை மெயிலாண்டவரிடம் தடுத்தாட்கொள்ளும் வகையில் தேவையான ஏற்பாடுகளை செய்தால், ஐயன்மீரவர்கள் தங்களின் முகவரியை மாற்றிக் கொண்டு வரும் கயவாளித்தனத்தை செய்து தாங்கள் சேற்றில் புரண்டுவரும் வராகத்தின் அவதாரம் என்று நிரூபித்துக் கொண்டிருக்கிறீர்கள்.

முக்கியமா அதிரை ஃபரூக் என்பதோர் மஹானு"பாவர்" தான் செய்வது இன்னதென்று தெரிந்தே செய்துக் கொண்டிருக்கிறார். இவரை எந்த பரமண்டலத்தில் இருக்கும் பரமபிதா இரட்சிப்பார் என்று தெரியவில்லை.

" டேய், பரதேசி, பன்னாடை, உனக்குச் சொன்னாலும் புரியாது... சேற்றுறை வராகமே, தானாவும் தெரியாத தறுதலயே.. கஸ்மாலத்துக்கு பொறந்த கஸ்மாலமே " இப்படியெல்லாம் இவரைத் திட்டிடுவேனோன்னு பயம்மா இருக்கு. ஏன்னா முதல்ல சொன்னப்ப திரும்பத்திரும்ப மடல் அனுப்பிச்சாரேன்னு ஐடிய ப்ளாக் பண்ணா புது ஐடில வந்து ரவுஸு பண்றார். எத்தனை முறை சொல்லியும் பயனில்லை.

ஆக இதனால "எல்லா மதம்" புடிச்சவங்களுக்கும் நான் சொல்லிக்கறது என்னவென்றால், நான் உங்கள் தாய் தந்தை மீதும், உங்கள் தங்கை அக்கா போன்றவர்கள் மீதும் அதிக மதிப்பு வைத்திருக்கிறேன். நீங்கள் திரும்பத் திரும்ப எனக்கு மதங்களைப் பற்றிய மடலைத் தொடர்ந்து அனுப்பிக் கொண்டிருந்தால் நான் உங்கள் பிறப்பை சந்தேகிக்கவும், உங்கள் தாய் தந்தையரை கெட்ட வார்த்தைகளால் பழிக்க வைத்த காரணத்துக்கான பழிபாவத்தை நீங்கள் அடைவீர்கள் என்று பட்டவர்த்தனமாய் தெரிவித்துக் கொள்கிறேன்.

என்னை உறுத்தும் கேள்வி:

இது போன்ற மடல்கள் அனுப்புவதின் மூலம் நீங்கள் அடைவதென்ன ? குறைந்த பட்சம் மரியாதை வைத்திருப்பவர்களையும் உங்களுக்கு எதிராக நீங்களே திருப்பி விடுகிறீர்கள். அது தான் நீங்கள் விரும்புவதா ?

****
நன்றியுரை

இனிமேல் நீங்கள் அனுப்பாமலிருக்கப் போகும் மடலுக்கான நன்றி இப்போதே!!

34 comments:

படிக்க ரசிக்க ஒரு திருக்குறள்