Thursday, April 15, 2010

ஜே ஜே... உனக்கும் ஜே ஜே!!

ஹ்ம்ம்... வர வர குட்டி இளவரசிக்கு அதிகாரம் ரொம்பவே அதிகமா போச்சு. வேலை ஆகனும்னா... " அப்பா நான் பெருசு பொண்ணு . எனக்குத் தெரியும்ப்பா" வேண்டாம்னா " நான் சின்னுது பொண்ணுப்பா... நீ பெருசு பையன். நீ தாம்பா செய்யனும் "

அதெல்லாம் இப்ப சொல்லி பல்பு வாங்க விரும்பாததால ( ஹ்ம்ம் சொந்தக் கதை சோகக் கதை ).

இளவரசியோட சில அதி அற்புத ஓவியங்களை பார்ப்போம்


இதுக்குப் பேர் பர்த்டே பார்ட்டியாம். அந்த கொழந்த ரொம்ப குட்டி பாப்பாவாம். அதுக்கு பர்த்டே பார்ட்டியாம். கலர் பலூன்ஸ் "சன்" எல்லாம் வந்திருக்காங்களாம் பார்ட்டிக்கு



மங்க்கியாம் பாம்பாம். மங்கி பாம்ப கடிக்கப் போகுதாம். பாம்பு பயந்து ஓடுறதால தலை முடி எல்லாம் கலைஞ்சு இருக்காமாம்.



லெஃப்ட் சைட்ல இருக்கறது மேங்கோ.. டாப்ல இருக்கிறது பனானா... அதுக்கு கீழ இருக்கிறது அதோட பேக்ஸ்...

பட்டாம்பூச்சி.. ரொம்ப வேகமா பறந்து போகுதாம். கொஞ்சம் வழி விட்டு நில்லுங்கப்பா... மோதி நீங்க கீழ விழுந்துடப் போறீங்க

46 comments:

படிக்க ரசிக்க ஒரு திருக்குறள்