உங்களுக்கான ஒரு சேவலுடன்.. ச்ச்ச்சே.. ஒரு சவாலுடன் வந்திருக்கிறேன். உங்களுக்காக மூளைக்கு வேலை தரும் விளையாட்டுடன் உங்களை சந்திக்க வந்திருக்கிறேன்!.
விளையாட்டு இங்கே!
விளையாட்டின் விதிமுறைகள்.
- விதிமுறை என்று ஏதுமில்லை.
- ஒவ்வொரு பக்கத்திலும் குறிப்புகள் விரவிக் கிடக்கிறது
- குறிப்புகள் எதிலும் இருக்கும். Image / Source Code / Browser title or Combination of all
- சில நேரம் address bar ல் மாற்ற வேண்டி இருக்கும்.
- சில நேரம் சுட்டியை கிளிக்கி அடுத்த கட்டத்துக்கு செல்ல வேண்டி இருக்கும்
- சில நேரம் ஒரே பதிலும் சில நேர பயனர்சொல் & கடவு சொல் தந்து அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும். அதற்கான குறிப்புகளைத் தேடிக்கொள்ளுங்கள்.
- ஒரு சில இடங்களில் கிடக்கும் படத்தில் கேட்கப் பட்டிருக்கும் கேள்வி, படத்தைப் பற்றிய நேரடியானதாக இருக்க வேண்டும் என்று இல்லை. அது சம்பந்தப்பட்டதாகவும் இருக்கலாம்.
- குறிப்புகளை இணையத்திலும் தேடி கண்டு பிடிக்கலாம்.
- Spelling mistakes are intentional - might be the clue or misleading. Choice is yours!
நீங்கள் 20ம் கட்டத்தை எட்டியவுடன் எனக்கு இங்கே பதில் இடவும். வெற்றியாளர்கள் பட்டியலில் சேர்ப்பதிற்கு வசதியாக இருக்கும்.

முக்கியமான ஒன்று. நேர்மையாக விளையாடுங்கள். இது மிக சுவாரசியமான ஒன்று. நீங்கள் ஏமாற்றி விளையாடினால் நட்டம் எனக்கில்லை என்றாலும் நீங்கள் சுவாரசியத்தை இழந்து விடுகிறீர்கள்.
இந்தப் பதிவிற்கான பின்னூட்டம் மட்டுறுத்தப் படும்.
உங்களின் வெற்றிக்கு வாழ்த்துகள்.
இதுவரை அனைத்து கட்டங்களிலும் வெற்றிபெற்றவர்கள் : வாழ்த்துகள் :)
- கே.வி.ராஜா
- சுபைர்
- ஜெகதீசன்
- இலவசகொத்தனார்
- பினாத்தலார்
- தொழிலதிபர் சஞ்சய்
- விஜய் ஆனந்த்
- விதூஷ் வித்யா
- நிஜமா நல்லவன்


26 comments:
Post a Comment