மனசு விசித்திரமானது இல்லைங்களா ? கொஞ்சம் இல்லைங்க ரொம்பவே
விசித்திரமானது. அது எந்த நேரத்தில் எப்படிச் சாயும் என்பதை சொல்றது
சிரமமானது. நம் செயல்களில் பெரும்பாலானவை நன்மையிலோ தீமையிலோ, வெற்றியிலோ
தோல்வியிலோ முடிவது மனதின் நிலமையைப் பொறுத்து தான் இல்லைங்களா ?
NLP
எனப்படும் Neuro Lingual Program சொல்லும் கருத்து என்ன அப்படின்னு
பார்ப்போம். நாம் மூளை புரிந்துக் கொள்ளும் வகையில் சொல்லும் கட்டளைகள்,
வார்த்தைகள் மனதில் பதிவதோடு இல்லாமல் ஆழ்மனதில் சென்று தங்கிவிடும்.
கூடவே அது தேவையான கட்டளைகளை உடலுக்கோ அல்லது மூளைக்கோ கொடுத்துவிடும்
என்கிறார்கள் அத்துறை வல்லுனர்கள். சில மன சிக்கல்களில் இருந்து விடுபட
இந்த முறை நன்கு வேலை செய்கிறதாம். எதிராளி எப்போதும் தவறு, நான்
எப்போதும் சரி என்ற எண்ணம் நேர்மறையா என்றால் நிச்சயம் மாற்றப் படவேண்டிய
எதிர்மறை எண்ணம் இது. அப்படியானவர்களுக்கும் இது போன்ற பயிற்சி நல்ல பலன்
தரும். அதனால தான் எதையுமே நேர்மறையா பேசனும் அப்படின்னு நமக்கு
பெரியவர்கள் சொல்லிக் குடுக்கறாங்க.
அனுமனுக்கு பலம் இருக்கிறது.
ஆனால் அதை அவர் உணராதவராக இருந்த வரை அவர் மதியூகம் மிக்க ஒரு மந்தி(ரி)
அம்மட்டே. ஆனா ஜாம்பவான் அவரோட பராக்கிரமத்தை சொல்லும் போது அனுமனால்
செயற்கரிய செயல் செய்யும் பலம் வந்து சேர்கிறது. அதே போல இராமனை
எடுத்துக் கொண்டால் அதி பலசாலி. ஆனால் தன் தம்பிக்கு ஒன்று என்று வந்த
போது அப்படியே அத்தனை சக்தியும் வடிந்து போய் உட்கார்ந்து விடுகிறான்.
அப்போது இந்திரசித்து அல்ல, அவன் படை வீரன் யாரேனும் வந்திருந்தாலும்
இராமனை எளிதில் வெற்றிக் கொண்டிருக்க முடியும். காரணம் இராமனின் மனதில்
இருந்த வலு வற்றிப் போயிருந்தது மீண்டும் தன் தம்பி உயிர்த்தெழும்
வரைக்கும்.
அதைத்தான் நம்மால் முடியும் என்ற எண்ணமே பாதி பலம்
என்பார்கள். அப்படியான ஒருவன் தான் வாலி. அவனின் பலம் தன்னால் முடியும்
என்பது. எதிராளியின் பலகீனம் வாலியால் முடியும், தன் பலம் அவனால்
அபகரிக்கப் படுகிறது என்ற எண்ணம். எப்போது எதிராளி தன் பலம் இழப்பதாக
நினைக்கிறானோ அப்போதே அவன் பாதி தோல்வி அடைகிறான். இதற்கு நேரடி வாழ்வியல்
உதாரணம் சொல்ல முடியும்.
சில வருடங்களுக்கு முன்னால நேரமேலாண்மை
வகுப்புக்குச் போயிருந்தேன். அதில் ஒரு அங்கமாக "நேர்மறை/எதிர்மறை"
பற்றிய பகுதி வந்தது. இன்ஸ்ட்ரக்டர் எதிர் மறை எண்ணம் எப்படி நம்
உடலையும் பாதிக்கும் என்பதை செயல்முறையில் காண்பித்தார்.
நல்ல
பலசாலியான ஒருவனை அழைத்து கையை நீட்டச் சொல்லி வேறொருவன் மூலம் அந்தக்
கையை இழுக்கச் சொன்னார். ஹ்ம்ஹூம். அவனால் முடியவே இல்லை. பின்பு
காகிதத்தில் ஏதோ எழுதி கொடுத்து இதை மூன்று நான்கு முறை படி என்றார். பின்
அதே போல கையை நீட்டச் சொல்லி இழுக்கும் போது வெகு இலகுவாக கையை கீழே
இழுக்க முடிந்தது.
அந்த காகிதத்தில் அவர் எழுதி இருந்தது
" நான் என் உடலின் சக்தியை இழந்து கொண்டிருக்கிறேன்"
அது
படிக்கும் வரைக்கும் நன்றாக பலசாலியாக இருந்த அந்த மனிதன் சட்டென்று பலம்
குன்றிப் போகக் காரணமானது எதிர்மறை எண்ணமன்றி வேறென்ன ?.
இப்படித்தான் பாருங்க ஒரு வக்கீல் கட்சி காரங்க கிட்ட சொல்லிட்டிருந்தார். எல்லாமும் முடியும் முடியாதது எதுவுமே இல்லைன்னு.
பக்கத்துல
இருந்த அவரோட பையன் சொன்னான். ஆமா முடியாதுங்கற வார்த்தை எங்கப்பா
அகராதில இல்லவே இல்லைன்னு. இவருக்கு ஒரே சந்தோஷம். மத்தவங்க முன்னாடி நம்ம
பையன் எப்படி ஒசத்தியா பேசறான்னு. கட்சிக் காரங்க எல்லாம் போனதும்
பையனக் கூப்டு நல்லா சொன்ன தம்பி. ஆமா உன்னை அப்படி சொல்லத் தூண்டினது
என்ன ? என்னோட திறமையா அப்படின்னு கேட்டார். அதுக்கு பையன் சொன்னான்.
"
அதெல்லாம் ஒண்ணுமில்ல... நேத்து அகராதிய பொரட்டிட்டு இருக்கும் போது
முடியாதுங்கற வார்த்தை இருந்த பக்கத்தையெல்லாம் நாந்தான் கிழிச்சுட்டேன் "
அப்படின்னு.
அப்ப தான் வக்கீல் நினைச்சாராம். நானாவது படிச்சுட்டு கிழிக்கிறேன். இவன் கிழிச்சுட்டு படிக்கிறான். இவன் எதிர் காலத்துல என்னாகப் போறானோன்னு.
ஏங்க இது நேர்மறை எண்ணமா எதிர் மறை எண்ணமா ?
நன்றி அதீதம்
எண்ணங்கள் இனியவை
Sunday, January 29, 2012
மனதின் மொழி. - அதீதம்
Labels:
அதீதம்,
இரவல் சிந்தனைகள்,
கிறுக்கல்கள்
| Reactions: |
Saturday, January 28, 2012
மனசே ... மனசே - அதீதம்
ஒன்றைப் பற்றியே திரும்பத் திரும்ப நினைப்பது. அது நமக்கு கெடுதல் செய்யும்
அல்லது நன்மை செய்யும் என்று தொடர்ந்து அது பற்றியே யோசிப்பது. நல்லதோ
கெட்டதோ அதைப் பற்றிக் கொண்டு விட மறுப்பது. உண்டுறங்கி திண்டு பேண்டு
புணருங்காலையும் அதையே நினைப்பது - மன நோய்க்கூற்றின் ஆரம்பக் கட்டம்
என்கிறது மருத்துவம்.
திரும்பத் திரும்ப கைகளைக் கழுவிக் கொண்டே இருப்பது, பூட்டிய பூட்டை திரும்பத் திரும்ப இழுத்துப் பார்ப்பது, யார் எது சொன்னாலும் அதில் ஏதோ என்னைக் குறித்து தவறாக பேசுகிறார்கள் என்று யோசிப்பது, யார் எதை சொன்னாலும் அதில் தான் நினைத்த ஒன்றை மட்டுமே தேடுவது என்று தொடர்கிறது இந்த நோயின் அறிகுறி.
சிலர் பிறக்கும் போதே இந்த நோயுடனே பிறந்திருக்கிறார்கள் என்பது ஆச்சரியத்திற்குறிய விஷயம். மூளைப் பகுதியில் ஏற்படும் இரசாயன மாற்றமே இதற்கு காரணமாம். அந்த இரசாயணத்தை சமநிலைக்கு கொண்டுவந்துவிட்டால் போதும் எல்லாம் சரியாகிவிடும் என்கிறார்கள்.
சில அறிகுறிகள் :
* மன அமைதிக்கு மிகவும் கஷ்டப்படுவது. தேவையற்ற எண்ணங்களோ, பிம்பங்களோ மனதில் தோன்றி வெளியேறாமல் மன அமைதியை குலைப்பது.
* சிறு சிறு அற்ப விஷயங்களைக் கண்டும் மனம் வருந்துவது.
* எப்போதும் தன்னை சுத்தமாக வைத்துக் கொள்ள அதீதப் பிரயத்தனம் செய்வது.
* ஏதோ ஒரு பயத்தினை மனதில் கொள்வது. அது நெருப்பாகவோ அல்லது கிருமியைப் பற்றியதோ, நீரைப் பற்றியதோ, ஏதோ பயம் மனதில் எப்பொழுதும் ஆட்கொண்டிருக்கும்.
* மனதுக்குள்ளேயோ அல்லது வாய்விட்டு உரத்தோ சில வார்த்தைகளை, வாக்கியங்களை அல்லது ஓசைகளை எழுப்பிக் கொண்டே இருப்பது.
* தான் சரி என்று நினைக்கும் வரை ஒரே வேலையை திரும்பத் திரும்ப செய்வது.
* தான் நினைத்த வகையிலே தான் வேலை நடக்க வேண்டும். அப்படி இல்லையேல் அந்த வேலையை தான் நினைத்த வகையிலே நடக்கும் வரை திரும்பத் திரும்ப செய்விப்பது.
* வழக்கமான தினவாழ்கை முறையில் சிறிது மாறுதல் ஏற்பட்டாலோ, தன்னுடைய " பெர்சனல் ஸ்பேஸ் " க்குள் யாரேனும் உள்நுழைந்ததாக கருதியோ அடிக்கடி மனச் சீற்றம் கொள்வது.
* யாரேனும் ஒருவரைப் பார்த்தால் அவரைப் போலவே நாம் இருந்தால் எப்படி இருக்கும் என்று யோசிப்பது
* தான் வாழும் சுற்றுப் புறத்தில் இருக்கும் பலவற்றை திரும்பத் திரும்ப எண்ணிப் பார்ப்பது. அந்த எண்ணிக்கை மாறுபட்டால் அதனால் மன அழுத்தம் கொள்வது.
* செய்த வேலையை திரும்பத் திரும்ப செய்வது, சரி செய்வது, மீண்டும் செய்வது அதை மீண்டும் சரி செய்வது. எல்லாம் சரியாக இருக்கிறது என்று தெரிந்த போதிலும் அதை மீண்டும் சரி பார்ப்பது. அது இன்னும் சரியாக செய்யப்படவில்லை என்ற எண்ணம் எழும்.
* ஏதாவது ஒன்று பேசும் போதும் எழுதும் போதும் அல்லது நினைக்கும் போதாகிலுமாகட்டும் கெட்ட வார்த்தைகள் வலிய திணிப்பது.
*ஏதோ ஒன்றை திரும்பத் திரும்ப தொட்டுக் கொண்டிருக்க வேண்டும் என்று நினைப்பது.
* தான் சொல்ல நினைத்த ஒன்றை சரியாக சொல்ல இயலாமல் போவது. இப்படித்தான் சொல்ல வேண்டும் என்று ஏற்கனவே பல முறை ஒத்திகைப் பார்த்தாலும் சொல்ல வரும்போதும் தடுமாறி சொல்லாமல் விடுவது.
இந்த ஆரம்ப நிலை ஒன்றும் வருந்த தக்க நிலை அல்ல. ஆனால் இது தொடர்ந்து கொண்டே போகுமானால் அது மனநோயில் கொண்டு விடலாம். இதில் ஏதோ ஒரு அறிகுறி நம்மில் யாருக்கும் இருக்கலாம். ஆனால் அது மனநோய் என்று அர்த்தம் ஆகிவிடாது. ஆனால் அந்த அறிகுறி உங்களின் சாதாரண வாழ்க்கையில் குறுக்கிடும்போதோ அல்லது தொடர்ந்து எப்போதும் இருக்கிறது என்று நீங்களோ அல்லது உங்களைச் சார்ந்தவர்களோ நினைக்கும் போது அதை சரி செய்ய முழுமனதுடன் முன் வந்தாலே போதும். அனைத்தும் சுகமே.
ஒருத்தன் யாரையோ நினைச்சுட்டே இருக்கிறது வேறு. ஆனா என்னையேன் நினைக்கவில்லை என்று ஒருத்தரை வற்புறுத்தறது வேறு இல்லையா ?. ஒருத்தன் தன் காதலி கூட உக்கார்ந்து சாப்டுட்டு இருக்கான். அந்த காதலிக்கு திடீர்னு புரையேறிட்டுது. உடனே காதலன் சும்மா இல்லாம நான் தான் திரும்ப நினைச்சேன்னு சொன்னான். உடனே காதலிக்கு வந்ததே கோபம்...
உள்ளினேன் என்றேன் மற்று என்மறந்தீர் என்றென்னப்
புல்லாள் புலத்தக் கனள்.
என்னைய மறந்திருக்க அதனாலத்தானே திரும்ப நினைச்சிருக்க... என்னை மறக்கற அளவுக்கு போயாச்சா அப்படின்னு கோச்சுக்கிட்டு போய்ட்டாங்களாம். இதுவும் நோய் கூற்றில் வருமான்னா ? வரும் ஆனா அந்த நோய்க்கு வேற பேருங்க. அதுக்குப் பேர் ஊடல். அதே போல ஒருவரின் பிரிவை நினைத்து நினைத்து வேதனைப் படுதலும் இந்த நோய்க்கூற்றில் வராது.
வருவார் கொழுநர் எனத் திறந்தும்
வாரார் கொழுநர் என அடைத்தும்
திருகும் குடுமி விடியளவும் தேயும் கபாடம் திறமினோ.
வெளியே போன கணவன் வீடு திரும்புவான்னு ஏதோ சத்தம் கேட்டா, உடனே கதவைத் திறந்து பாப்பாங்களாம். அடடே அந்த சத்தம் அவர் வந்ததால வந்தது இல்லைன்னு மறுபடி கதவடைப்பாங்களாம். இப்படி திறந்து மூடி திறந்து மூடி, விடியறதுக்கு முன்னாடியே அந்த கதவின் மரத்தாலான குடுமி தேஞ்சுட்டதாம். இதெல்லாம் ஏக்கம், கணவனைப் பற்றிய எதிர் பார்ப்பு. இதுவும் அதே நோய்க்கூறா என்றால் இருக்கலாம். ஆனால் நாயகனைக் கண்டதும் உடனடியாக குணமாகக் கூடிய நோய். இது தவறே இல்லை.
இப்படித்தான் பாருங்க ஒருத்தர் மருத்துவரிடம் சென்று முறையிட்டார்.
" டாக்டர்.. நான் எப்பவுமே என் மனசுக்குள்ள கிரிக்கெட் ஆடறதப் பத்தியே நினைச்சுட்டிருக்கேன். நேத்து கூட பாருங்க சச்சின் டபுள் செஞ்சுரி போடறதுக்குள்ள அவுட் ஆகிட்டார். ரொம்ப மனசு கஸ்டமாய்டுச்சு. பிரட்லீ போட்ட ஸ்பீட்ல ஸ்டம்ப்பு அப்படியே எகிறிடுச்சு "
" அடடே.. கவலையே வேண்டாம். சரி பண்ணிடலாம். அப்படி உக்காருங்க. இந்த தண்ணி கொஞ்சம் குடிங்க. ஒரு ரெண்டு நிமிஷம் அமைதியா இருந்தீங்கன்னா சச்சின் நூறாவது செஞ்சுரி போடப் போறார். அது முடிஞ்சதும் உங்களை கவனிக்கிறேன்" அப்படின்னு சொல்லிட்டு கண்ணை மூடிக்கிட்டாராம்.

கதை மாதிரி,
சிந்தனைகள்
| Reactions: |
Friday, January 27, 2012
சிறகசைக்கும் உயிர் பறவை - அதீதம்
சில்லென்று ஊடுறுவும்உருவமற்ற உன் உணர்வு,
மெல்ல என்னை வெளியே
இழுக்கிறது.
இழுத்துக் கட்டிய தேகமென்று
எத்தனை முறை பார்த்திருப்பேன்
எத்தனை பேர் வியந்திருப்பார்
இன்று முழுதாய் பார்க்கப் போகிறேன்
என்னை நானே
வெளியிலிருந்து.
பனிக்கட்டியாய் குளிர்ந்த
உன் கைகள் பற்றி மேலெழுகிறேன்
என் தேகமும் குளிரட்டுமென
ஒற்றைக் கூட்டின் சிறைவாசம் விடுத்து
பரந்து விரிகிறேன்
விழிப்புலன்களுக்கெட்டா தேசத்தில்
இருந்தும் இல்லா பெருவெளியில்
ஏகாந்தம் தேடி
எனக்கான இடம்
வேண்டுமென!
Subscribe to:
Posts (Atom)